சமூக நீதிப் போராளி, தியாகி திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


விடுதலைப் போராட்ட வீரரும் முன்னாள் இராணுவ வீரருமான தியாகி
வே.இம்மானுவேல் சேகரன் (அக்டோபர் 9, 1924 - செப்டம்பர் 11, 1957) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர். 

 தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.

ஆங்கிலம், இந்தி, உருசிய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். இந்திய இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார்.

 'ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். இரட்டை குவளை முறைக்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்புக்கு எதிராகவும் மாநாட்டை நடத்திய இவர் 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மறைந்தார்.

 இவரின் நினைவாக இந்திய அஞ்சல் துறை 2010ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.

உலக அஞ்சல் தினம்!.

 உலக தபால் ஒன்றியம் (Universal Postal Union) என்பது 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.

 1969ஆம் ஆண்டு உலக தபால் ஒன்றியத்தின் மாநாடு டோக்கியாவில் நடைபெற்ற போது, அதில் உலக தபால் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தை நினைவுக்கூறும் விதமாக ஆண்டுதோறும் உலக அஞ்சல் தினத்தை அக்டோபர் 9 ஆம் தேதி கொண்டாட வேண்டும் என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Birthday of social justice activist and martyr Mr Immanuel Sekaran


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->