தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு.M.பக்தவச்சலம் அவர்கள் பிறந்ததினம்!.
Birthday of former Tamil Nadu Chief Minister Mr m Bhaktavatsalam
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் 1897ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிறந்தார்.
விடுதலைப் போராட்டக்காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தார். 1963ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார்.
1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த இவர், இன்னும் இரு ஐந்தாண்டு திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம் என்று அப்போதே நம்பிக்கையுடன் கூறினார்.
இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர் எம்.பக்தவத்சலம் தன்னுடைய 89-வது வயதில் 1987 பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மறைந்தார்.

உலகின் மாபெரும் போராளி தோழர்.சே.குவேரா அவர்கள் நினைவு தினம்!.
விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம், இல்லையெனில் உரம் - என்ற முழக்கதோடு சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெற்றி கண்ட உலகின் மாபெரும் போராளி தோழர்.சே.குவேரா
அவர்கள் நினைவு தினம்!.
சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (சூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.
"விதைத்தவன் உறங்கினாலும்விதை உறங்குவதில்லை".
English Summary
Birthday of former Tamil Nadu Chief Minister Mr m Bhaktavatsalam