ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு: வரும் நிதியாண்டில் நடைமுறை: கூடுதல் செலவு ஏற்படும் என கணிப்பு..! - Seithipunal
Seithipunal


ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுகான ஆணையம் அமைக்கப்படும். கடைசியாக 2016-இல் 07-வது ஊதியக்குழு அளித்த அறிக்கை அமலுக்கு வந்தது. இந்நிலையில், 08-வது ஊதியக்குழு அறிக்கை வரும் நிதியாண்டில் நடைமுறைக்கு வரவுள்ளது.

குறித்த 08-வது ஊதிய குழு அறிக்கையை அமல்படுத்துவதன் மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு ரூ1.80 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அம்பிட் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி குறைஞ்சபட்சம் ஊதியம் 18,000 ரூபாய் இருந்து 32,940 முதல் 44,280 ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்ற விதிப்படி இந்த கணக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

இதில், ரூ.50,000 அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு ஊதிய உயர்வு ரூ.91,500 முதல் ரூ.1.23 லட்சம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, சுமார் 01 கோடியே 12 லட்சம் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன் கிடைக்கும் நிலையில், அது பல்வேறு வழிகளில் செலவுகளை ஊக்குவித்து அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும்.

மேலும், வீடுகள் விற்பனை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை, வாகனங்கள் விற்பனை, பங்குசந்தை முதலீடுகள் போன்றவை அதிகரித்து ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என்றும் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is estimated that there will be additional expenses as the salary hike for Union government employees comes into effect in the coming financial year


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->