பொள்ளாச்சி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 05 பேர் காயம்: புத்துகுளத்தில் கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு..! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 05 பேர் காயமடைந்தனர். இதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வடக்கிப்பாளையத்தில் இருந்து 22 பேர் வேனில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். அதே பகுதியை சேர்ந்த கோபால் (52) என்பவர் வேனை ஓட்டியுள்ளார்.

பல்வேறு கோயில்களுக்கு சென்றுவிட்டு இன்று காலை திருச்சி மாவட்டம் மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் புத்தாநத்தத்தை கடந்து வேன் சென்ற போது, புத்துகுளம் பாலம் வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் வேனிலிருந்த 05 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து புத்துகுளம் பாலம் வளைவு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவதால், அதை தடுக்க வலியுறுத்தி புத்தாநத்தம், மெய்யம்பட்டி, கரும்சோலைபட்டி, மாலைக்காட்டுபட்டி, தோப்புப்பட்டி, முத்தனம்பட்டி, ஆலம்பட்டி, காடையம்பட்டி, மணியங்குறிச்சி, கருமலை, புதுப்பட்டி, இடையப்பட்டி, நல்லபொன்னம்பட்டி, அழககவுண்டம்பட்டி, கனவாய்பட்டி, புங்குனிபட்டி, பாறைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு புத்துகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த தாசில்தார் செல்வம், புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறி சாலை மறியலை தொடர்ந்துள்ளனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரிகள் புத்துகுளம் பகுதியில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த நிலையில்,பொது மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 02 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Villagers block road in Puthukulam after 5 injured in Pollachi tourist van overturn


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->