பேச கூட அனுமதி இல்லை - மக்களவையில் கொந்தளித்த ராகுல்காந்தி!
No permission to speak Rahul Gandhi raged in the Lok Sabha
எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. திட்டமிட்டு நான் பேச அனுமதி மறுக்கிறார்கள். நான் தொடர்ந்து மக்களுக் காக குரல் கொடுப்பேன் என மக்களவையில் ராகுல்காந்தி கூறினார்.
பாராளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் இன்று 11 மணிக்கு பாராளுமன்றம் தொடங்கியது. முதலில் அகமதாபாத் விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு வழக்கமான அலுவல்கள் நடைபெற்றன.
அப்போது எதிர்க்கட்சி கள் எழுந்து பகல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.அப்போது கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களை பற்றி பேசவேண்டும் என்று கூறினர்.
ஆனால் சபாநாயகர் அதை ஏற்கதனால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நிகழ்ச்சி தொடங்கிய 20 நிமிடங்களில் ஒத்தி வைக்கப் பட்டது.
இதையடுத்து 12 மணிக்கு மீண்டும் சபை கூடியதும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். இதனால் தொடர்ந்து அமளி ஏற்பட்ட போதும் சபாநாயகர் கோரிக்கைகளை ஏற்க வில்லை.இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் வெளியில் வந்த ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேச கோரிக்கை விடுத்து அதை அரசு ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் பேச அனு மதி கேட்டேன்.ஆனால் எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. நான் தொடர்ந்து மக்களுக் காக குரல் கொடுப்பேன்.இவ்வாறு அவர் கூறி னார்.
இதையடுத்து பிரியங்கா நிருபர்களிடம் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவரை முடக்க பார்க்கிறார்கள். அவரை பேச அனுமதிக்க வேண்டும்" என கூறினார்.
English Summary
No permission to speak Rahul Gandhi raged in the Lok Sabha