CM ஸ்டாலினின் பயணம் திடீர் ஒத்திவைப்பு - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
CM Stalin Programs cancel
முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அவர் கலந்து கொள்ளவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் வரும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
English Summary
CM Stalin Programs cancel