நமீபியாவில் தரையிறங்கிய பிரதமர் மோடி! விமான நிலையத்தில் கோலாகல வரவேற்பு!
Prime Minister Modi lands in Namibia grand welcome airport
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக பிரேசில் சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா அவர்கள் பிரேசிலின் உயரிய விருதான "Grand Collar of the National Order of the Southern Cross " விருதை மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

மேலும், பிரேசில் அளித்த விருது தனக்கு மட்டுமில்லாமல் 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி,பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நமீபியா சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், விமான நிலையத்தில் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து தாளம் இசைத்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ந்தார்.
English Summary
Prime Minister Modi lands in Namibia grand welcome airport