#BREAKING : முதல்வர்கள் கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும் - திமுக எம்.பி டி.ஆர்.பாலு.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க  முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்த நிலையில், டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி, இன்று டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த வகையில், தற்போது ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பிடிபி, ராஷ்ட்ரிய லோக்தளம், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், ஆம் ஆத்மி, டிஆர்எஸ், சிரோன்மணி அகாலிதளம், தெலுங்குதேசம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத்பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத் பவார் மீண்டும் நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்

இந்தக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளின் சார்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனா கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சியி சரத் பவார் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்வு செய்வர். மீண்டும் இதேபோல் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஜூன் 21ஆம் தேதிக்குள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

President election candidate discussion with state chief ministers


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->