பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு...! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் காம்பிரா-முக்பூர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி, இன்று காலை 7.30 மணியளவில் யாருமே எதிர்பாராத விதமாக இடிந்து கீழே விழுந்தது.

மேலும், பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாஹி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி 10 பேர் காயமடைந்தனர். இந்த தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பால விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் துயரமானது.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்" எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

President Draupadi Murmu expressed condolences to those who died bridge accident


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->