'வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் ஜோசப் விஜய்க்கு அவகாசம் கொடுப்போம்; நிறைவேற்றவில்லை என்றால் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம்'; பிரேமலதா..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு நாம் அவகாசம் கொடுக்கவேண்டும் எனவும், ஒருவேளை வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றால், நிச்சயம் சட்டப்பேரவையில் தேமுதிக சார்பில் கேள்வி எழுப்புவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது;

என்னை வெற்றிபெற வைத்த விருதாச்சலம் தொகுதி மக்கள், மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் மற்றும் தேமுதிகவினருக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். விருதாச்சலம் தொகுதிக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில், நான் சார்ந்திருக்கும் மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் எனது ஆதரவை அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

 

அத்துடன், தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கும் விஜய்க்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற காலஅவகாசம் கேட்டிருக்கிறார். எனவே, அவருக்கு நாம் அவகாசம் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒருவேளை வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்றால், நிச்சயம் சட்டப்பேரவையில் தேமுதிக சார்பில் கேள்வி எழுப்புவோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அத்துடன், கஜானாவில் பணம் இல்லை என முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்தான் கூறியிருக்கிறார். அது அவருடைய கருத்து, எனவே, அது குறித்து அவர்தான் விளக்க வேண்டும். அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று விஜயகாந்த் பிரேமலதா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Premalatha states that we should give Chief Minister Joseph Vijay time to fulfill his promises


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->