மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..! - பிரேமலதா விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நேற்று 39 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்த்து அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஊரை குறிக்கோளோடு களத்தில் இறங்கி உடைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும் களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேமுதிக சார்பாக மீண்டும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

விநாயகர் ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற வகையில் மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha statement about loksabha election


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->