நிதிஷ் குமாரை பற்றி பேச பிரசாந்த் கிஷோருக்கு அருகதை இல்லை! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தை போன்று பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரூம் நாடு முழுவதும் 3500 கிலோமீட்டர் பாதயாத்திரையை நடந்து வருகிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி துவங்கியவர் பீகார் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்நோக்கி நடத்தப்படுவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்னும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார் என பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இது குறித்த அவர் பேசியதாவது "பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார் தற்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடன் கூட்டணி வைத்துள்ளார். ஆனால் அவர் இன்னும் பாஜகவுடன் தொடர்பில் இருந்து வருகிறார். ஐக்கிய ஜனதா கட்சி சேர்ந்த உறுப்பினர் பாஜகவின் ஆதரவால் ராஜ்யசபா துணை தலைவர் பதவியைப் பெற்றார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய உடனேயே ராஜ்யசபா துணை தலைவர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை. இதிலிருந்தே நிதிஷ்குமார் பாஜகவுடன் மறைமுக உறவில் இருந்து வருகிறார் என்பதை வெட்ட வெளிச்சம் ஆகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் தியாகி கூறியதாவது "50 ஆண்டு கால அரசியல் ஆளுமையை வெறும் ஆறு மாதங்களே அரசியலில் உள்ள பிரசாந்த் கிஷோர் பேச அருகதை இல்லை" என கடுமையாக விமர்சித்துள்ளார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prashant Kishore has nothing to talk about Nitish Kumar


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->