புகழாரம்! யாரும் செய்திடாததை செய்தார் மோடி ஜி... தனக்கு எதிராகவே திருத்தம் கொண்டு வந்தார்...! - அமித்ஷா
Praise Modi ji did what no one else did he brought amendment against himself Amit Shah
பாராளுமன்றத்தில், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறைக்காவல் பெற்றால் அவர்கள் கட்டாயமாக பதவி விலக வேண்டும் என்ற வகையில் பதவி பறிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் மசோதாவின் முக்கியம்சம் என்னவென்றால், முதல்வர்கள், அமைச்சர்கள், 5 ஆண்டு தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பதுதான் முக்கிய முடிவு.

இந்த மசோதாவை தற்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியுள்ளது.இதனிடையே,இந்த மசோதா குறித்து மனம் திறந்த அமித் ஷா, "பதவி பறிப்பு மசோதாவில் பிரதமர் பதவியையும் பிரதமர் மோடி சேர்த்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இந்திரா காந்தி 39வது திருத்தத்தை (ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகரை இந்திய நீதிமன்றங்களின் நீதித்துறை மதிப்பாய்விலிருந்து பாதுகாப்பது) கொண்டு வந்தார்.இதில் நரேந்திர மோடி ஜி, பிரதமர் சிறைக்குச் சென்றால், பிரதமராக இருப்பவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அரசியலமைப்புத் திருத்தத்தை தனக்கு எதிராகக் கொண்டு வந்துள்ளார்.
இருப்பினும் பிரதமரே சிறை சென்றாலும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற வகையில், தனக்கு எதிராகவே ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்துள்ளார் பிரதமர் மோடி" என்று தெரிவித்துள்ளார்.இது வரவேற்கத்தக்க விதமாக இருப்பதாக பாஜக தொண்டர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
English Summary
Praise Modi ji did what no one else did he brought amendment against himself Amit Shah