ஈழ துரோகி கருணாநிதியோ? பிரபாகரனா? வாய் திறப்பாரா வைகோ, திருமா.! ரசித்து மகிழும் முதல்வர் ஸ்டாலின்.! என்ன தான் பிரச்சனை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் ஈழப் போர் உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அதற்கு முன்பாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், தமிழார்வலர்கள் போராட்டம் நடத்திய போது அதனை ஒடுக்குவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இப்படியாக ஈழத்தில் போர் உச்சத்தில் இருக்கும்போது, திமுக அரசு, அன்றைய ஒன்றிய அரசு காங்கிரஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தமிழர்களின் குற்றச்சாட்டு. அதுமட்டுமல்லாமல் வெளிப்படையாகவே இன்றைய திமுகவின் கூட்டணிக் கட்சிகள் அன்று தமிழின துரோகி திமுக-காங்கிரஸ் என்று தெரிவித்தனர்.

குறிப்பாக வைகோ, கருணாநிதியை தமிழின துரோகி என்று கடுமையாக விமர்சனம் செய்து பல பேட்டிகள் வெளியிடப்பட்டிருந்தார். ஈழப்போர் காரணமாகவே அடுத்து நடந்த இரு சட்டமன்ற தேர்தல்களில் கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி தோல்வியையே தழுவியது.

மேலும், கருணாநிதி பிறந்தநாள் வரும் போதெல்லாம் ஈழ துரோகி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆவது வாடிக்கையாகி வந்தது.  

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் இந்த நிலையில், முக ஸ்டாலின் முதல்வராக இருக்கும் இந்த நிலையில், திமுக உடன் பிறப்புகள் நேற்று "ஈழத் துரோகி பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பிரபாகரனின் அறுபத்தி ஏழுவது பிறந்தநாளை முன்னிட்டு ட்ரண்ட் செய்து உள்ளனர்.

எப்படிப் பார்த்தாலும் இதனை கருணாநிதியின் மகனாகிய தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரசிக்கத்தான் செய்து இருப்பார் என்பதே நிதர்சனம். அதற்கான காரணங்கள் முன்னதாகவே அனைவருக்கும் தெரிந்தது தான்.

சரி அவர்தான் அப்படி என்றால்., திமுகவின் கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் திமுகவினரின் நேற்றைய செயல் குறித்து எந்த ஒரு விமர்சனமும் முன்வைக்காமல் கூட்டணி தர்மத்தோடு மௌனம் காத்து இருப்பது தமிழ் ஈழ தமிழர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சொல்லப்போனால் அவர்களின் சொந்த கட்சி உறுப்பினர்களுக்கு இது பேரதிர்ச்சி தான்.

மாவீரர் நாள்:

தமிழீழ விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் மாவீரர்நாள் நவம்பர் 27-இல் நினைவு கூறப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உயிர்த்தியாகம் செய்த முதல் போராளி லெப்டினன் சங்கர் வீரச்சாவடைந்த நாள் இதுவாகும். 

அதே சமயத்தில் நேற்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 67 -வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த இரு நாட்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் செய்தி சொல்லப்படுகிறது. 

"இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்" என்று தமது கடைசி (2008) மாவீரர்நாள் உரையில் மாவீரன் பிரபாகரன் தெரிவித்து இருந்தார்.

ஆனால், 'சாய்சஸ்' எனும் புத்தகத்தில் சிவசங்கர மேனன் எழுதியிருக்கிறார் ‘பிரபாகரன், பொட்டம்மான் போன்ற தலைவர்களைப் பாதுகாத்து ஏதாவது ஒரு அரசியல் தீர்வினை எட்ட முற்பட்டபோது அன்று டெல்லியில் உள்ள அரசியல் தலைமையும் (காங்கிரஸ்) தமிழ் நாட்டு தலைமையும் (திமுக) அதனை விரும்பவில்லை. 

பிரபாகரனின் இருப்பு தங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று நம்பினார்கள். அதனால் இந்த போரினை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பினார்கள்’ என்று அவர் எழுதி இருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று பிரபாகரனின் 67-வது பிறந்தநாளையொட்டி தமிழர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, தமிழ் ஈழம் அமைப்பது குறித்து கருத்துக்களையும், சில பகிர்வுகளை வெளியிட்டு வந்தனர்.

ஆனால், திமுக தொண்டர்கள் மிக மோசமாக பிரபாகரன் மீது குற்றம் சாட்டி கருத்துக்களை தெரிவித்து வந்தனர். திமுகவின் தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் எதுவும் கண்டுகொள்ளவில்லை. அவருக்கும் ஈழத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போலவே கடந்து சென்றுவிட்டார்.

அட., திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, மதிமுக கூட வாய்திறக்கவில்லை. திமுக உடன்பிறப்புகளின் நேற்றைய பதிவுகள் அனைத்துமே தமிழ் ஈழ போரை கொச்சை படுத்துவது போல் அமைந்துள்ளதால், இதற்கான பலனை, முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று பதிலடியாக பதிவுகள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prabakaran birth day issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->