அதிமுகவில் அதிகாரப் போர் தீவிரம்.. கொறடா யார்? சின்னம்மா ரிட்டர்ன்ஸ்! இனிமே நாங்க தான்..சசிகலா செய்த சம்பவம் - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது கட்சியின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் அரசியல் போராட்டம் வெளிப்படையாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து உரிமை கோரியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததையடுத்து கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்தது. இதன் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இணைந்து தனி அணியாக செயல்பட தொடங்கினர். அவர்கள் சட்டப்பேரவையில் அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், கொறடாவாக சி. விஜயபாஸ்கரையும் தேர்வு செய்ததாக அறிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தரப்பில் சட்டப்பேரவை குழுத் தலைவராக தானே தொடருவதாகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாக நியமித்துள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த மோதல் உச்சத்தை எட்டியது சமீபத்திய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது. அப்போது எஸ்.பி. வேலுமணி அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, சி.வி. சண்முகம், வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

இதன் பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையை சண்முகம் தரப்பு கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற தகவல்கள் வெளியானதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து பேசிய சி.வி. சண்முகம், “அதிமுக அலுவலகத்தை நாங்கள் கோயிலாக நினைக்கிறோம். எந்த பாதிப்பும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம். சட்டப்படி உண்மையான அதிமுக தொண்டர்கள் நாங்கள்தான் என்பதை நிரூபித்த பிறகே அங்கு செல்வோம்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேரவைத் தலைவரை சந்தித்து, “அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் அதிகாரப்பூர்வ கொறடா. தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

அதேபோல், சண்முகம் அணியை சேர்ந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் காமராஜ் ஆகியோரும் பேரவைத் தலைவரை சந்தித்து, “எங்களிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. எனவே வேலுமணியை சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், விஜயபாஸ்கரை கொறடாவாகவும் அங்கீகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

இதன் மூலம் தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ சட்டமன்றத் தலைவர் யார்? கொறடா யார்? என்ற கேள்வி மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவு, அதிமுகவின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, சசிகலா தரப்பும் மீண்டும் அரசியலில் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி அதிமுக கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற முயற்சி நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், பழனிசாமி தரப்பு ஆளுநரை சந்தித்து, “தவெக அரசு அமைப்பதில் குதிரை பேரம் நடைபெற்றுள்ளது” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மனு அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் தற்போது வெடித்துள்ள இந்த அதிகாரப் போர், சாதாரண உள்கட்சி மோதல் அல்ல; கட்சியின் அடுத்த தலைமையை தீர்மானிக்கும் முக்கியமான அரசியல் திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power struggle intensifies in AIADMK Who is the whip Chinnamma returns It us now Sasikala incident


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->