கேரளத்தில் அரசியல் அதிர்ச்சி! சுதாகரன் இழைத்த துரோகத்தை சுட்​டிக்​காட்​டி தான் நான் கூறினேன்...! - பிரனாயி விஜயன் - Seithipunal
Seithipunal


கேரள அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் இருமுறை அமைச்சருமான ஜி.சுதாகரன் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டு தனித்த பாதையைத் தேர்வு செய்துள்ளார்.

தன்னை புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், கட்சியின் உறுப்பினர் பதவியை புதுப்பிக்க மறுத்ததுடன், அம்பலப்புழா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எச்.சலாம் போட்டியிடுகிறார்.இந்த அரசியல் மோதல் வார்த்தைப் போருக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சுதாகரனை விமர்சித்த கேரள முதல்வர் பினராயி விஜயனின் கருத்துக்கு பதிலளித்த அவர், “மலையாளச் சொற்களின் உண்மையான அர்த்தமே முதல்வருக்கு புரியவில்லை” என கடுமையாக சாடியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்த பினராயி விஜயன், “நான் பயன்படுத்திய சொற்கள் தனிப்பட்ட அவமதிப்பிற்காக அல்ல. மார்க்சிய கொள்கைகளுக்கு எதிராக சுதாகரன் எடுத்துள்ள நிலைப்பாட்டை சுட்டிக்காட்டும் நோக்கத்திலேயே அவை கூறப்பட்டன” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Political shock Kerala I said while pointing out betrayal committed by Sudhakaran Pranayi Vijayan


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->