அரசியல் களம் சூடுபிடிப்பு! தவெக எம்.எல்.ஏ-க்களுடன் செங்கோட்டையன் ரகசிய ஆலோசனை...! - அடுத்தது என்ன?
political arena heating up Sengottaiyan secret consultation Tvk MLAs What next
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி, மாநில அரசியலில் தனிப்பெரும் சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மையை எட்ட இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அணிகளின் ஆதரவை தவெக நாடியிருந்தது.

இதில் காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் விசிகவும் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் உள்ளன.இந்த அரசியல் பரபரப்பான சூழலில், 108 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஒப்புதல் கடிதத்துடன் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவி அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரும் மனுவை சமர்ப்பித்தார்.
எனினும், அந்த சந்திப்புக்குப் பின்னரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடித்தது.
இதையடுத்து இன்று மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநரை விஜய் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆனால், அப்போதும் ஆளுநர் தரப்பிலிருந்து உறுதியான சாதகச் சிக்னல் எதுவும் வெளிவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலைக்கு இடையே, தவெக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தையும் கட்சித் தலைமையகம் அவசரமாக நடத்தியது. இதில் தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், உறுப்பினர்களுக்கு முக்கிய அரசியல் ஆலோசனைகள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் பதவியேற்பு வாய்ப்புகள், பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சிகள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
political arena heating up Sengottaiyan secret consultation Tvk MLAs What next