திமுகவில் அதிரடி மாற்றங்கள்? இன்றே ஸ்டாலின் எடுக்கும் முடிவு.. உதயநிதிக்கு புதிய பதவி! சேகர்பாபு மீது நடவடிக்கை! ரகசிய ரிப்போர்ட் - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று மதியம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வருகிற 22-ஆம் தேதி திமுக உயர்நிலைச் செயல் திட்டக் குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கட்சியின் புதிய நிர்வாக அமைப்பு தொடர்பான முடிவுகளை இறுதி செய்ய தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியை இளைய தலைமுறையை நோக்கி நகர்த்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்றும், அவரை செயல் தலைவராக நியமிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கக்கூடாது என்ற விதியை அமல்படுத்துவது குறித்து தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பதவியை இழக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு மாற்றுப் பொறுப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே சென்னையில் திமுக சந்தித்த தேர்தல் பின்னடைவு தொடர்பாக ஸ்டாலின் அமைத்த 36 பேர் கொண்ட ஆய்வுக் குழு தனது இறுதி அறிக்கையைத் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த அறிக்கையில், சென்னை திமுகவின் வாக்கு வங்கி சரிவுக்கு நிர்வாகக் குளறுபடிகள், கோஷ்டிப் பூசல் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் அதிருப்தி உள்ளிட்ட காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சென்னை மாவட்ட திமுக நிர்வாகத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடிமட்டத் தொண்டர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டதாகவும் ஆய்வில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் வடசென்னையில் தவெகவின் வளர்ச்சியை சரியாகக் கணிக்கத் தவறியது உள்ளிட்ட விஷயங்களும் தலைமை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வளவு புகார்கள் இருந்தபோதிலும் சேகர்பாபு மீது உடனடி கடுமையான நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் திமுகவின் அமைப்பை மீண்டும் வலுப்படுத்த கள அனுபவம் கொண்ட நிர்வாகிகள் தேவை என்பதால், சேகர்பாபுவை முழுமையாக ஓரங்கட்டாமல் நிர்வாக மாற்றங்களை மட்டும் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், தேர்தல் தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலை மேலும் பாதிக்கப்படும் என்ற கருத்தும் கட்சிக்குள் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இதனால், இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்களுக்கு அடித்தளமிடும் கூட்டமாக பார்க்கப்படுகிறது. உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு, கனிமொழிக்கு புதிய பதவி, மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு என அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை திமுக தலைமை அறிவிக்குமா என்பதற்கு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் கூட்டங்கள் முக்கிய விடையாக அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Major changes in the DMK Stalin to make a decision today A new post for Udhayanidhi Action against Sekar Babu A secret report


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->