சற்றுமுன் ஆண்டிபட்டியில் அமமுக-வினர் போலீசார் இடையே மோதல்.! போலீசார் துப்பாக்கி சூடு.!! பதற்றம், போலீசார் குவிப்பு..!!!  - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனம் மூலம் பணம் அதிகம் எடுத்து வருகிறதா என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக கிடைத்த தகவலின் படி, தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் சோதனை மேற்கொள்ள ஆண்டிபட்டி அமமுக கட்சி அலுவலகத்தில் வந்துள்ளனர்.

அவர்களை சோதனையிட விடாமல் தடுத்த அமமுகவினர், போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்று உள்ளனர். இதன் காரணமாக போலீசார் வானத்தை நோக்கி 4 முறை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதனால், அமமுக-வினர் தெறித்து ஓடினர், பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் கைப்பற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. துப்பிக்கி சூடு காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 
 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

POLICE GUN FIRE IN AANDIPATTY


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal