ஈரோட்டில் தவெக விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய போலீசார்..! - Seithipunal
Seithipunal


வரும் 18-ஆம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ள தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

கரூர் சம்பவத்துக்கு பின்னர், மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம், புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், வரும் 18-ஆம் தேதி, ஈரோட்டில் பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விஜயமங்கலம் டோல்கேட் அருகே, விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதி அளிக்குமாறு காவல்துறையிடம் த.வெ.க.,வினர் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில், விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். குறித்த நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வாடகை 50 ஆயிரம் ரூபாய், டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய் விஜய் தரப்பில் செலுத்தப்பட்டதால் நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி சுஜாதா அனுமதி வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police grant permission for the TVK Vijay public meeting event in Erode


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->