அரசு ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பாமக ஆதரவு! - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சும்மா 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக டி.பி.ஐ வளாகம் பரபரப்பாக காணப்படுவதால் பாதுகாப்புக்காக காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். தொடரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியர்கள் குடும்பத்தினரும் ஈடுபட்டு வருவதால் தற்போது வரை 100க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், முதலுதவி பணிகளுக்காக பேராசிரியர் அன்பழகன் வளாகத்தல் தற்காலிகமாக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடக்காததற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையின் மூலம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாமக வடக்கு மண்டல இணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரமான ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK support to govt school teachers hunger strike


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->