நீட் விவகாரம் : அனைத்துகட்சிக் கூட்டத்தில் பாமகவின் நிலைப்பாடு என்ன? சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நீட் விலக்கு தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு அளித்து துணை நிற்கும் என்று, பாமக சார்பாக கலந்துகொண்ட ஜி கே மணி எம்.எல்.ஏ., அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார். 

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 

இந்நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இதனை தொடர்ந்து இன்று, தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை அரங்கில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தான் இலக்கு என கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அவர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நீட் விலக்கு தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு அளித்து துணை நிற்கும் என்று, பாமக சார்பாக கலந்துகொண்ட ஜி கே மணி எம்.எல்.ஏ., உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK STAND WITH TN GOVT FOR NEET ISSUE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->