மருத்துவர் இராமதாஸ் பிறந்தநாள்: டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் வாழ்த்து!
PMK Ramadoss birdh day AMMK TTV BJP Vanathi wish
பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்ட கொள்கையில் துளியளவும் சமரசமின்றி அரசியல் களத்தில் பயணிக்கும் மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் மாமனிதர்களில் ஒருவருமான மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் இராமதாஸ் அவர்களின் 87-வது பிறந்தநாளான இன்று, மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் ஐயா இராமதாஸ் அவர்கள், ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும் மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Ramadoss birdh day AMMK TTV BJP Vanathi wish