பாமக போராட்டம் எதிரொலி.! தமிழக முதல்வர் அழைப்பு.! அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்திருக்கிறார்கள். 

அதன்படி முதற்கட்டமாக இன்று (01.12.2020) காலை 11.00 மணிக்கு  சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. ஆனால், போலீசார் சென்னையின் 6 நுழைவாயில்களிலும் சுமார் 5000 போலீசார் பாமகவினரை சென்னையினுள் விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்ததாவது, "பாமக 40 ஆண்டு காலமாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி கேட்டு வருகிறது. மருத்துவர் ராமதாஸ் பல போராட்டங்களை இதுகுறித்த நடத்தியுள்ளார்.

இது யாருக்கும் எதிரான போராட்டம் கிடையாது. எங்களது தொண்டர்கள் வருகையில் நேற்று இரவு காவல் துறையினர் திடீர் என ஆங்காங்கே நிறுத்தி உள்ளனர். எங்களை அப்படியே விட்டிருந்தால் சென்னையில் ஒரு பகுதியில் போராட்டம் நடத்தி, அப்படியே கலைந்து இருப்போம்.

காவல்துறை வேண்டுமென்று அங்கு தடுத்து நிறுத்தியதால், பல பிரச்சினைகள் தற்போது எழுந்துள்ளது. வேண்டும் என்று இடை நிறுத்தப்பட்டு உள்ளனர். மதியம் ஒன்றரை மணிக்கு தமிழக முதல்வர் சந்திக்க அனுமதி கொடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியினர் அமைதியாக இருக்கவேண்டும். எங்கும் எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது." என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk protest tn cm call


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->