தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்.. பாமக எம்எல்ஏவின் கேள்வியும்.. முதல்வர் மு க ஸ்டாலினின் பதிலும்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18ஆம் தேதி 2022 -2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில்,  காலை 10 மணிக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து, சாலை விபத்துக்களை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா? என பாமக எம்.எல்.ஏ அருள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, சாலை விபத்துக்களை குறைக்க 5 அம்ச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 33,245 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.  சாலை விபத்துகளை குறைக்க முதன்மையான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து,  பூம்புகார் தொகுதி உப்பனாற்றின் குறுக்கே அணை கட்டப்படுமா? என எம்.எல்.ஏ முருகன் கேள்வி எழுப்பினர். அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். ரூ. 9.73 கோடி செலவில் உப்பனாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK MLA Arul Question for TN Assembly


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->