முப்படைகளையும், பட்டை தீட்டும் பாமக..! தயாரான தொண்டர்கள்..!  - Seithipunal
Seithipunal


வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் இன்று கரூர் பாமக சார்பில் நடைபெற்றது.

கரூரில் இருக்கும் பாமக கட்சி அலுவலகத்தில் கரூர் மாவட்ட பாமக இளைஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞர்கள் சங்க துணை தலைவர் மலை.முத்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர்கள் சங்க செயலாளர் பிவி.செந்தில் கலந்து கொண்டார்.

அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் தங்கைகள் படை, தம்பிகள் படை, மாணவர் படை என்று முப்படைகளையும் தயாராக்கி அவர்களை வரும் தேர்தலில் எவ்வாறு பணிசெய்ய உத்வேகப்படுத்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே பாஸ்கரன், சதீஷ், விஸ்வநாதன், கண்ணன், யுவராஜ், பாபு, வரதன், பாலசுப்பிரமணியன் மற்றும் முருகன் ஆகிய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk meeting in karur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->