சென்னையில் முகாமிடும் டாக்டர் ராமதாஸ், அன்புமணி எம்பி! முதல் கட்சியாக களமிறங்கும் பாமக! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீட உள்ளதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதற்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாமக தலைவர்  ஜி.கே.மணி  வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை மறுநாள் (05.03.2021) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர்  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்குவார்கள்" என தெரிவிக்கப்ட்டுள்ளது. 

தமிழகத்தில் முதல் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK manifesto will released on march 5 at chennai By Dr Ramadoss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal