தமிழில் டிவிட் போட்ட பிரதமர் மோடி.! ரீடிவிட் செய்த அண்ணாமலை.! பெருமிதத்தில் பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட் செய்து உள்ளார்.

மேலும், வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் நினைவை  பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

பிரதமரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்.  

அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்களின் இந்த பதிவை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரீட்வீட் செய்துள்ளார். அதில், "சிவகங்கை சிம்மம்,வீரத்திருமகள் வேலுநாச்சியார்.அடக்குமுறையை எதிர்த்து ஆங்கிலேயரை வென்று காட்டிய வீர தமிழச்சி. மகளிர் சக்தியை மகா சக்தியாக உயர்த்திய மங்கையர் திலகத்தை பிறந்த நாளில் நினைவு கூறுகிறோம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Narendra Modi tweet about to Queen Velunachiyar Birthday


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->