ஊழல் அமைச்சர்கள் இனி தேவையில்லை - பிரதமர் மோடி சொன்ன செய்தி!
pm modi say about corrupted minister scam issue
பிரதமர் நரேந்திர மோடி, கறைபடிந்தவர்கள் முக்கிய பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக கடும் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த பதவி நீக்கச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளை குறிவைத்து பேசிய அவர், சிறையில் இருக்கும் நிலையில் ஒருவர் பிரதமராகவோ, முதல்வராகவோ, அமைச்சராகவோ செயல்படுவது எப்படி சாத்தியமாகும் என சந்தேகம் எழுப்பினார்.
மோடி தனது உரையில், “ஒருவர் அரசு ஊழியராக இருந்தால், அவர் 50 மணி நேரம் சிறையில் வைக்கப்பட்டாலே தானாகவே வேலை இழக்க நேரிடும். அது ஓட்டுநராக இருந்தாலும், கிளெர்க் அல்லது பியூனாக இருந்தாலும் விதி ஒரே மாதிரி அமலாகும். ஆனால், அதே நேரத்தில் ஒருவர் முதல்வராக, அமைச்சராக அல்லது பிரதமராக இருந்தால், அவர் சிறையிலிருந்தபடியே பதவியில் தொடர்கிறார். இது எவ்வாறு நியாயமாகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும், “சிறையிலிருந்து அரசை நடத்தும் நிலைக்கு அனுமதி கொடுக்க முடியாது. மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க தலைவர்கள் சுத்தமாகவும், ஒருமைப்பாட்டுடன் இருப்பதும் அவசியம். குற்றச்சாட்டு பட்டியலில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பது ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்கும்” என்று எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் பெரும் விவாதத்தை கிளப்பிய மூன்று சட்டத்திருத்த மசோதாக்களை விளக்கும் போதும், மோடி இந்த கருத்துகளை முன்வைத்தார். மக்கள் எதிர்பார்ப்பது ஊழல் அற்ற, தூய்மையான அரசியல்தான் என்றும், அதை உறுதி செய்வதே தன்னுடைய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
pm modi say about corrupted minister scam issue