ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு - பிரதமர் மோடி பெருமிதம்.! - Seithipunal
Seithipunal



கோவா மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் 100 சதவீத குழாய் நீர் விநியோகத்தை குறிக்கும் வகையில் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ இணைப்பு மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாவது,

"சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், மூன்று கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. ஆனால், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில், பா.ஜ.க அரசு கூடுதலாக ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கியுள்ளது. 

இந்த மூலம் நீர் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தை அறிவிக்கப்பட்ட போது, ​​16 கோடி கிராமப்புற குடும்பங்கள் மற்ற நீர் ஆதாரங்களை நம்பியிருந்தனர். இவ்வாறு மக்கள் போராடுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. 

ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பு, அரசியல் விருப்பம், பங்குதாரர்களின் கூட்டு மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் போன்றவைகள் தான் காரணம்". என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Piped water connection to seven crore rural families Prime Minister Modi is proud


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->