சரியான போட்டி! கூச்சல் கூட்டம் Vs கொள்கைக் கூட்டம்! -உதயநிதி மறைமுகமாக விஜய்க்கு சவால் விட்டாரா...?
perfect match shouting crowd vs policy crowd Did Udhayanidhi indirectly challenge Vijay
தமிழக துணை முதல்வர் 'உதயநிதி ஸ்டாலின்' தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டதாவது,"சென்னை தென்மேற்கு மாவட்டத்தின் மயிலாப்பூர், தியாகராய்நகர் மற்றும் சென்னை வடகிழக்கு மாவட்டத்தின் திருவொற்றியூர் தொகுதிகளைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி வட்ட, பகுதி நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.

இளைஞர்கள் வெறும் சத்தமிட்டுக் கூச்சலிடும் கூட்டமாக அல்லாமல், அரசியல் புரிதலுடன் கொள்கையை விளக்கும் கூட்டமாக இருக்க வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தினேன்.
அதேசமயம், இளைஞர் அணி ஆற்றிவரும் சமூக, அரசியல் பணிகளையும் எடுத்துக்கூறினேன்.வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி, “வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!” என்ற இலக்குடன் பயணிக்கிறோம்!" என்று அவர் பதிவு செய்துள்ளார்.
இதில் “அரசியல் புரிதல் இல்லாமல் வெறும் கூச்சலிடும் கூட்டம்” என்ற அவரது குறிப்பை, அண்மையில் திமுகவினரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயை விமர்சிக்க பயன்படுத்திய சொற்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, உதயநிதி தனது பதிவில் மறைமுகமாக விஜயை குறிவைத்ததாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.
English Summary
perfect match shouting crowd vs policy crowd Did Udhayanidhi indirectly challenge Vijay