#BREAKING : ஒருத்தர் கூட புகார் அளிக்கவில்லையே ஏன்? பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 200 பேரின் செல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகியது. 

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் 'பெகாசஸ்' மூலம், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின்  செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. 

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடரை நடத்த விடாமல், இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்து வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 'பெகாசஸ்' விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, இன்று தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்தது. அப்போது, பெகாசஸ் மென்பொருள்  மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் ஏன் இதுவரை எந்தப் புகாரும் அளிக்கவில்லை? என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞ்சர் கபில் சிபில், "தொழில்நுட்பம் மூலம் தனிநபர் அந்தரங்களை அரசு வேவு பார்ப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. sos நிறுவனம் உளவு பார்க்க கூடிய தகவல்களை ஒரு நாட்டின் அரசுக்கு மட்டுமே வழங்கும். இந்த பெகாஸஸ் தொழில்நுட்பம் ஊறு விளைவிக்கக்கூடியது, சட்டவிரோதமானது. 

நமக்கு தெரியாமலேயே நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை உளவு பார்க்க கூடியது இந்த உளவு மென்பொருள். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, மூத்த வழக்கறிஞர்கள் பலர் செல்போன் உளவு பார்க்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் உளவு பார்க்கப்பட்டாலும், அதுகுறித்த விவரம் தற்போது தான் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக காரணமாகத் தான் இத்தனை நாட்கள் யாரும் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்." என்றும் கபில் சிபல் வாதாடினார்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pegasus case in sc now


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->