ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியாகி பரபரப்பு; தவெகவில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவர் அதிரடி நீக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளரும், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான, என்.வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அவர் தவெகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் நவீன், பணி முடிந்தும் பில் நிலுவையில் இருந்ததாகவும், அதை அனுமதிக்க வீரா முதலில் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகை ரூ.1.30 லட்சம் லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி கூகுள் பே மூலம் அனுப்பப்பட்டதுடன், மீதமுள்ள தொகையை நேரில் வழங்கியதாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.வி. தினகரன் (எ) தீனா, இன்று (ஜூலை 15-ஆம் தேதி) வெளியிட்ட அறிவிப்பில், 'கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் வீரா (எ) வீராசாமி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்' என்று தெரிவித்துள்ளார்.

வீராசாமி மீது கடந்த 2023-ஆம் ஆண்டு ஊராட்சி நிர்வாக முறைகேடு தொடர்பாக வார்டு உறுப்பினர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்ததும், பின்னர் அவரது காசோலை கையொப்ப அதிகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், 2025-ஆ ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தலைவர் பதவியை இழந்த அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அண்மையில் மீண்டும் தலைவர் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Panchayat president removed from TVK after video surfaced of him accepting a bribe of Rs 13 0000 lakh from a contractor


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->