எங்க குரல் ஒடுக்கப்படுகிறது'...! மேகதாது தீர்மான விவாதத்தில் சபாநாயகர் செய்த காரியம்...! - வெளியே வந்து இபிஎஸ் அதிரடிப் பேட்டி...!
Our voice being suppressed What Speaker did Mekedatu resolution debate Come out and give EPS action interview
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் கடும் அரசியல் பரபரப்பு நிலவிய நிலையில், அவை உரிமை மீறல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேகதாது அணை தீர்மானத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து அவையில் உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து பேச அனுமதி கோரி வலியுறுத்தினார்.

இதனால் அவையில் கடும் வாக்குவாதமும் பரபரப்பும் நிலவியது.ஆனால், இந்த விவகாரத்தில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முடிவை அதிமுக எந்த வகையிலும் ஏற்கவில்லை.
இத்தகைய முக்கிய தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்ற தகவலை சட்டசபையில் முன்கூட்டியே அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஆனால் அது செய்யப்படவில்லை.தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படாதது தெளிவான விதிமீறலாகும்.
இது அவை நடைமுறைகளுக்கு எதிரான செயல்.அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்து, முழுமையான விவாதத்திற்கு பின்னரே தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
அதுவே ஜனநாயக மரபுக்கும் அவை மரியாதைக்கும் ஏற்ற நடைமுறையாகும்.மேகதாது அணை தீர்மானம் குறித்து எங்களது கருத்துகளை பதிவு செய்யவும், உரிமை மீறல் குறித்து பேசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சபாநாயகர் எங்களை பேச அனுமதிக்காதது ஏமாற்றமளிக்கிறது" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
English Summary
Our voice being suppressed What Speaker did Mekedatu resolution debate Come out and give EPS action interview