கனவுகளை நனவாக்கும் தொடக்கமாக அமையட்டும்.!! அமித் ஷாவுக்கு ஓபிஎஸ் தீபாவளி வாழ்த்து!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் பாஜகவின் ஆதரவு தனக்கு இருப்பதால் மீண்டும் அவரை கட்சியில் இணைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் அழுத்தம் மூலம் மீண்டும் இணைவது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த நிலையில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இதனை பாஜக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதே வேளையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஒளி வீசும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளி உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும் ஆண்டின் தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS wishes Amit Shah on Diwali


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->