முருகேசன் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும்.! முதல்வர் முக ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பாப்பநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். 

இதன்போது, அங்குள்ள பாப்பநாயக்கன்பட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த ஏத்தாப்பூர் காவல்துறை அதிகாரிகள், இவர்களின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், மதுபோதையில் வாகனம் இயக்கி வந்தது உறுதியானது. இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகள் முருகேசனின் வாகனத்தை பறிமுதல் செய்யவே, இதனால் முருகேசன் காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் கொந்தளிப்படைந்த காவல் துறை உதவி ஆய்வாளர் பெரியசாமி முருகேசனை லத்தியால் சாலையிலேயே அடித்து நொறுக்கியுள்ளனர். மதுபோதையில் இருந்த முருகேசன் மயங்கி விழுந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முருகேசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், சேலம் இடையப்பட்டி அருகே சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போது, வெள்ளையன் (எ) முருகேசன் என்ற விவசாயியை  நடுரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சி அடையச் செய்கிறது. உயிரிழந்த திரு.முருகேசன் அவர்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரே இப்படி நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் அரசுப்பணியும் வழங்கவேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி "காவல்துறை உங்கள் நண்பன்" என்பதற்கிணங்க மக்களிடம் காவல்துறையினர் மனிதத் தன்மையோடு நடந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops tweet for salem si attacked man death issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->