ஓபிஎஸ் & டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில்? ஒரு நொடி யோசித்து ஆர்பி உதயகுமார் கொடுத்த பதில்! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார்களா என்ற விவகாரம் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக அதிமுக மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் அளித்த பதில் கவனம் ஈர்த்துள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சார பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

அதிமுக தற்போது பாஜகவுடன் என்டிஏ கூட்டணியில் இருந்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இரட்டை இலை வாக்குகள் பிரியாமல் இருக்க, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. குறிப்பாக பாஜக தரப்பில் இந்த முயற்சிக்கு அதிக ஆர்வம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை அதிமுகவில் மீண்டும் இணைக்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாகவும், அதே நேரத்தில் அவர்கள் தனிக்கட்சிகளாக என்டிஏ கூட்டணியில் இணைந்தால் அதற்கு சம்மதம் என தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பின்னணியில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமாரிடம் செங்கோட்டையன் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இந்த விவகாரத்தில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதிலளித்துவிட்டதாகவும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் குறித்து மேலும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

தேர்தல் தயாரிப்புகள் குறித்து பேசிய அவர், அதிமுக எப்போதும் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கும் கட்சி என குறிப்பிட்டார். இந்தாண்டும் ‘எழுச்சி பயணம்’ மூலம் பிரச்சாரத்தை அதிமுகவே முதலில் தொடங்கியதாகவும், இதுவரை எடப்பாடி பழனிசாமி 175க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விருப்பமனு பெறும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், முதல் நாளிலேயே 1500க்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளதாகவும் கூறினார்.

பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, “எல்லாக் கேள்விகளுக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும். 2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என பதிலளித்தார். நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல், தை மாதத்தில் தீர்வு வரும் என அவர் கூறியிருப்பது, அடுத்த மாதங்களில் அதிமுக அரசியலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS TTV Dinakaran back in AIADMK RP Udayakumar answer after thinking for a second


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->