அதிமுக சார்பில் களமிறங்கி மூன்று முறை வெற்றிப்பெற்ற போடிநாயக்கனூரில் திமுக சார்பில் களமிறங்கும் ஓபிஎஸ்..!
OPS to contest from Bodinayakanur on behalf of the DMK
முன்னாள் அதிமுக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், தனது 50 ஆண்டுகால அதிமுக அரசியல் வாழ்விற்குப்பின் திமுகவில் இணைந்த இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
ஜெயலலிதா அவர்கள் 1989ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது. இதையடுத்து, ஜெயலலிதாவின் அபிமானம் பெற்ற ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்று, வருவாய்த்துறை பொதுப்பணித்துறை, நிதித்துறை என பல்வேறு துறைகளில் அமைச்சர், இரண்டு முறை தமிழக முதலமைச்சர் வரை உயர்பதவிக்கு சென்றார். அதேப்போன்று தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் பெரியகுளம் தொகுதி தனி தொகுதியாக்கப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூருக்கு இடம்பெயர்ந்தார்.
இதனையடுத்து போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்று முறையும் வெற்றி பெற்றார். மொத்தத்தில் தனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் அதிமுக சார்பில் ஐந்து சட்டன்ற தேர்தல்களை கண்ட ஓ பன்னீர்செல்வம் தோல்வியே காணாமல் வெற்றிபெற்று, 25 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தனது 50 ஆண்டுகால அதிமுக அரசியல் வாழ்விற்குப்பின், தற்போது முதல்முறையாக திமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடஉள்ளார். அதிமுக சார்பில், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில், ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுக சார்பில் முதல்முறையாவும், மொத்தம் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.
English Summary
OPS to contest from Bodinayakanur on behalf of the DMK