பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் அணி முடிவு..!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதோடு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி மற்றும்  ரிஷிகேஷ் ராய் அமரின் முன்பு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு முழுமையான வெற்றி இல்லை என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கடந்த ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொது குழு செல்லும் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை. அதே சமயத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக முறையிடலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

எனவே அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்குவோம்" என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS team decision to approach civil court against AIADMK Resolutions


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->