தேசிய இயக்கங்களால் வளர முடியாது..!! அண்ணாமலை முதல்வராகிடுவாரா..!! ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


அண்ணாமலையால் தமிழகத்தின் தலைவராக முடியாது..!! 

 

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களை அழித்துவிட்டு தேசிய இயக்கங்கள் ஆட்சி செய்ய முடியாது என பேசியுள்ளார். நாஞ்சில் கோலப்பன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது "தமிழக பாஜக கட்சிக்கு அண்ணாமலை தலைவர், எங்கள் கட்சிக்கு அண்ணன் ஓபிஎஸ் தான் தலைவர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. 

தமிழக பாஜகவில் எத்தனையோ தலைவர்களை பார்த்து விட்டோம். தமிழக பாஜகவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவரை மாற்று வாருங்கள். இதற்கு முன் தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். பாஜக ஒரு கூட்டணி கட்சி அதனால் அண்ணாமலை முதல்வர் ஆகிடுவாரா? எதிர்க்கட்சித் தலைவர் ஆகிடுவாரா? மக்கள் ஓட்டு போட்டதால் யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வர முடியும். 

அண்ணாமலையை ஏற்றுக் கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கு முன் தமிழக பாஜகவிற்காக உழைத்த எல்.முருகன் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். தற்பொழுது அண்ணாமலை உழைக்கிறார் அடுத்ததாக மத்திய அமைச்சர் பதவிக்கு அண்ணாமலை போகலாம். அதற்காக தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றால் அது முடியாது. இங்கு திராவிட பாரம்பரியங்கள் அதிகமாக உள்ளது. திராவிட இயக்கங்களை அழித்துவிட்டு தேசிய இயக்கங்கள் இங்கு வளர முடியாது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். தமிழக பாஜாவுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS supporter said Annamalai cannot be the president of TN


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->