அண்ணன் என்று பழைய பாசத்தோடு அழைத்த தம்பிக்கு சொல்கிறேன்.. யாரை சொல்கிறார்.? டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

அதிமுகவில் தொடர்ந்து குழப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் அவர்கள், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைந்து பயணிக்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கடந்த கால கசப்புணர்வா.? அல்லது புரட்சித்தலைவரும், நம் அம்மா அவர்களும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா.? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.

மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும். இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை, அண்ணன் டிடிவி தினகரன் என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்து கொள்கிறேன்.' என பதிவிட்டுள்ளார்.

அதாவது கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பு உணர்வுகளை மறந்து செயல்பட வேண்டும் என்று 'அண்ணன்' என்று அழைக்கும் நபருக்கு டிடிவி தினகரன் அறிவுரை வழங்கி உள்ளார். ஓ பன்னீர்செல்வத்திற்குத்தான் டிடிவி தினகரன் இந்த மறைமுக அறிவுரையை வழங்கி இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS speech about TTV Dinakaran


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->