இரட்டை இலை முடங்கினால்... படிவத்தில் கையெழுத்திட தயார்.. பன்னீர்செல்வத்தின் தடாலடி பதில்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் மற்றும் திமுக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கின. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமாகா அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் விட்டுக் கொடுப்பதாக கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தேர்தல் பணி மற்றும் வேட்பாளர் குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர். பழனிச்சாமி அணியின் தரப்பில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வழியாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இதனால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின்பொழுது பன்னீர் செல்வத்திடம் "இரு அணிகளும் போட்டியிட்டால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்க கூடுமே" என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம் "இரட்டை இலை முடங்கினால் அதற்கு நான் காரணம் அல்ல. எனது அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையத்தில் சின்னம் பெறும்  கடிதத்தில் கையொப்பமிட நான் தயாராக உள்ளேன்.

தற்பொழுது வரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மட்டுமே இருந்து வருகிறது. தேர்தல் ஆணையமும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை அங்கீகரித்துள்ளது. எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு நான் கையெழுத்திட தயாராக உள்ளேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார். இரு அணியினரும் போட்டியிட உள்ளதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS said he not response if AIADMK double leaf symbol freezed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->