சொன்னபடி சொன்னதை செய்த ஓ.பி.எஸ்.. தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட வரைவோலை.!  - Seithipunal
Seithipunal


இலங்கையில் நிலவும் பொருளாதார அசாதாரண நிலையால், பொதுமக்கள் அன்றாட தேவைக்கான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை கூட நீண்ட வரிசையில் நாள்கணக்கில் நின்று வாங்கும் நிலை இருக்கிறது. 

இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. முன்னதாக இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகிய நிலையில் அடுத்ததாக ரனில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும், இலங்கையின் அசாதாரண சூழலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்ற இலங்கைக்கு, தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்த நிலையில், தற்போது சட்டசபையில் அளித்த வாக்குறுதியின்படி, ஓ.பி.எஸ் தனது மூத்த மகன் ப.ரவீந்திரநாத் மற்றும் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் வங்கிக்கணக்கிலிருந்து தலா ரூ.25 லட்சம் என்று மொத்தமாக ரூ.50 லட்சத்துக்கான டி.டியை தலைமை செயலாளருக்கு, இன்று அனுப்பி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops fund transfer for sri Lanka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->