உச்சகட்ட சந்தோஷத்தில் ஓபிஎஸ்., இபிஎஸ்.,! வெளியான பெருமை மிக்க செய்தி.! - Seithipunal
Seithipunal


தஞ்சை கரந்தை பகுதியைச்  சேர்ந்த பொறியியல் மாணவர் ரியாஸ்தீன், உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக்கோள்களை கண்டறிந்துள்ளார். இவரின் விஷன் சாட் V1 மற்றும் V2 ஆகிய இரண்டு Femto செயற்கைக்கோள்களை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவ உள்ளது.

இந்நிலையில், மாணவர் ரியாஸ்தீன்-க்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! இதனை நாசா 2021-ல் விண்ணில் ஏவ இருப்பது கூடுதல் பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோளை வடிவமைத்து உலக அரங்கில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையைச் சேர்ந்த மாணவர் செல்வன்.ரியாஸ்தீன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!" என்று தெரிவித்துள்ளார். 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops eps wish to thanjai stdent


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal