பரபரப்பான அரசியல் சூழலில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசு வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர் தொடர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றும் அவர் எங்களை விட்டு நீண்ட தூரம் பயணித்து விட்டார் என்றும் பேசியிருந்தார்.

இதனை கடுமையாக எதிர்த்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட தன்னிடம் கே.பி முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டு பெற்றதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் தங்கமணி பேசிய வீடியோ ஒன்றை வெளியிடப் போவதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கே.பி முனுசாமி கடனாக வாங்கியதை இவ்வாறு மாற்றி பேசுகிறார் என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

சென்னை எக்மோரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் மற்றும் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இபிஎஸ் தரப்பினர் வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS consultation today with supporters in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->