விடாமல் துரத்தும் ஓபிஎஸ்.. விடாப்பிடியாக நிற்கும் ஈபிஎஸ்.. இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு.!!
OPS appeal AIADMK related case Verdict today
அதிமுகவில் இருந்து பொதுக்குழு செயற்குழுவில் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு வழங்குகிறது.
English Summary
OPS appeal AIADMK related case Verdict today