சாட்டையை சுழற்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.. முக்கிய நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு, கோவை மாநகர் மாவட்டங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு புறநகர் மேற்கு கோவை மாநகர் மாவட்டங்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும், திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தேர்தல் பணியாற்றுகின்ற காரணங்களால், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ராமமூர்த்தி (சத்தியமங்கலம் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ), S.A. பூங்கோதை (சத்தியமங்கலம் நகர மகளிர் அணித் தலைவர், 23-ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி) மணியா (சத்தியமங்கலம் நகர 23-ஆவது வார்டு கழக துணைச் செயலாளர்) ராதாகிருஷ்ணன் (சத்தியமங்கலம் நகர 21-ஆவது வார்டு கழக துணைச் செயலாளர்).

S.P. குமார் (சத்தியமங்கலம் நகர 19-ஆவது வார்டு கழகச் செயலாளர்), காளிதாஸ்,(சத்தியமங்கலம் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) K. தேவராஜ் (சத்தியமங்கலம் நகர 1-ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி) ரங்கசாமி (தோப்பூர் காலனி, 17-ஆவது வார்டு, சத்தியமங்கலம் நகரம்) ராஜமாணிக்கம் (இந்திரா நகர், 9-ஆவது வார்டு, காசிபாளையம் பேரூராட்சி) P. ஆறுமுகம் (5-ஆவது வார்டு கழகச் செயலாளர், அரியப்பம்பாளையம் பேரூராட்சி) 

கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, M. ஜெயக்குமார், (32 ஏ வட்டக் கழகச் செயலாளர், சங்கனூர் பகுதி) ஆகியோர், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and eps new announcement on feb 14


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->