அதிமுக பிரமுகர் மரணம்.! இரங்கல் தெரிவித்த ஒ.பி.எஸ் இ.பி.எஸ்.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் மற்றும் துணை  ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டடுள்ள இரங்கல் செய்தியில்,

கடலூர் மேற்கு மாவட்டம், மங்கலம்பேட்டை அதிமுகவின் பேரூராட்சி கழகச் செயலாளர் திரு.நூர் முகமது அவர்கள் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் ஆரம்ப காலத்திலிருந்து உடன் பிறப்பாக இருந்து செயல்பட்டு வரும் திரு.நூர்முகமது அவர்கள் கழகத்தின் மீதும், இதே தெய்வமான மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது விசுவாசம் கொண்டு கழகப் பணிகளை சிறந்த முறையில் ஆற்றி வந்தார். 

அன்புச் சகோதரர் திரு.நூர்முகமது அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் அடியில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and eps condolences to aiadmk member death


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal