“ஆபரேஷன் எஸ் புஸ்வானது… எடப்பாடி கையில்தான் சூப்பர் பவர்.. கண்டுக்க கூட இல்லை பாருங்க..செங்கோட்டையன் அமைதி”
Operation S is failure Edappadi has super power He canot even see it Sengottaiyan is quiet
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வந்த “ஆபரேஷன் எஸ்” – அதாவது ஆபரேஷன் செங்கோட்டையன் – இப்போது புஸ்வானதாகி விட்டது.
சில வாரங்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கையையும், முக்கியமான சவாலையும் விடுத்தார்.
“எம்ஜிஆர் தொடங்கிய காலம் முதல் நான் அதிமுகவில் உள்ளவன். எம்ஜிஆர் வழியில் செயல்படுவேன். தற்போது கட்சி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை உடனே மீண்டும் சேர்க்க வேண்டும். பத்து நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வேன்,” என அவர் வலுவாக தெரிவித்திருந்தார்.
மேலும், “எனது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இனி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பிரச்சாரங்களில் பங்கேற்பேன். அனைவரையும் ஒன்றிணைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்,” எனவும் எச்சரித்தார்.
ஆனால், காலக்கெடு முடிந்து 20 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.டெல்லி தரப்பிலிருந்தும் எந்த அழுத்தமும் அவருக்கு இல்லை.அமித் ஷாவை சந்தித்து நல்ல உறவை பேணி வருகிறார்.
ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் நடைபெறவில்லை.செங்கோட்டையனும் அதிமுக ஒருங்கிணைப்புக்காக எந்தப் பணிகளையும் தொடங்கவில்லை.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி தனது எழுச்சி பயணத்தை, குறிப்பாக கொங்கு மண்டலத்தில், எதிர்ப்பின்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்த நாளிலிருந்து, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா கூட அமைதியாக உள்ளனர்.
இதனால், அதிமுகவில் ஆளுமை எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
முன்னாள் தலைவர்களை மீண்டும் கொண்டு வர எந்த வாய்ப்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தனது தலைமையைக் கேள்விக்குள்ளாக்கும் முயற்சிகளை எளிதாக ஓரங்கட்டிவிட முடியும் என்பதை செங்கோட்டையன் விவகாரம் மூலம் எடப்பாடி வெளிப்படுத்தியுள்ளார்.ஆபரேஷன் எஸ் – பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த புரட்சி – இப்போது புஸ்வான கதையாகி விட்டது.
English Summary
Operation S is failure Edappadi has super power He canot even see it Sengottaiyan is quiet