#சற்றுமுன்: குடியுரிமை சட்ட போராட்ட எதிரொலி.! பல்கலைகழகத்திற்கு தொடர் விடுமுறை.!  - Seithipunal
Seithipunal


குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்தை கண்டித்தும், நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி ஆகிய பல்வேறு மாநிலங்களிலும் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் விடுமுறை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மத்திய பல்கலை கழகத்திற்கு நாளை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் ஆனது அறிவித்து இருக்கின்றது.

இதற்கிடையில் அனைத்து மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மாணவர்களிடம் கோரிக்கை வைத்து இருக்கின்றார். அவர் சகோதரத்துவம் அமைதி நல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியம், தேச நலன் கருதி மாணவர்கள் எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one month leave for thiruvarur central university


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->